Sunday, 22 April 2012

கும்புடுறேனுங்கோவ்வ்....!!!

மஹா ஜனங்களே..... கும்புடுறேணுங்கோவ்வ்....


இவனும் எப்பவாச்சும் பதிவு போடுவான்..... நாமளும் படிக்கலாம்ணு மூணு மாசமா நம்பி காத்திருந்த உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.... என்னங்க பண்ணுறது எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன.....???


”என்ன பதிவு போடலாம்”னு ஒரு மாசமா யோசிச்சிக்கிட்டிருந்தேன்.....

”என்ன பதிவு போடுறதுண்ணே தெரியல நீயெல்லாம் எதுக்கு ப்ளாக் ஆரம்பிச்சே”ண்ணு ஒரு மாசம் யோசிச்சேன்.....

”அட இப்பிடி யோசிச்சே ரெண்டு மாசத்த ஓட்டிட்டமே”ண்ணு ஒரு மாசம் உக்காந்து ஃபீல் பண்ணிட்டிருந்தேன்.....

திரும்பி பாத்தா... அடி ஆத்தா.... மூணு மாசம் போயிடுச்சி.....


சரி விடுங்க இப்பவாச்சும் ஒரு முடிவுக்கு வந்தனே...

தாமரைக்குட்டி


 தாமரைக்குட்டிணு எதுக்கு பேரு வச்சேனுணு கேக்காத ஆள் இல்ல....

தாமரை எங்கணா குட்டி போடுமா பக்கி...லாஜிக் உதைக்குதே?ணு கூட ஐடியா மணி கேட்டாப்புல.....

அப்பிடி கேட்டதும் தான் எனக்கு ஐடியாவே வந்திச்சு....

 நாமளும் லாஜிக்கே இல்லாம பீட்டர் உடுறதும் பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்கிறதும்... எங்கங்க இருக்கு லாஜிக்?

இத சிம்பாலிக்கா சொல்லுறதுக்காக தான் இப்பிடியொரு பெயரு....

நம்மக்கிட்டையும் லாஜிக் எதிர்பாக்கக்கூடாது, இஷ்டத்துக்கு பீட்டர் உடுவேன் ஆமா.....


நானும் பதிவுலகத்துல புகுந்துட்டேன்... உங்களோட வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் இன்ன பிற உதவிகள் அனைத்தும் தேவை...

என்னுடைய ப்ளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டிகள் இணைப்பதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளேன்... ஏன்ணா எவனும் ஓட்டு போட மாட்டான்... ஹிஹிஹிஹி....

என்னை முதன் முதலில் முக நூலின் நாற்று குழுமத்தில் சேர்த்து நட்பின் வட்டம் பெருக வைத்த ஐடியா மணி க்கு நன்றி...

இனி வரும் நாட்களில் சீராண இடைவெளியில் கலகல பதிவுகளை நீங்கள் படிக்கலாம்....., சிரிக்கலாம்....

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை, வாரி வழங்கி வாழ்த்துமாறு கேட்டுக்கிறேன்...

தொழில் நுட்ப அறிவில் நான் எவ்வளவு வீக் என்பதை மதுரனும், நிரூபனும் நன்கு அறிவார்கள்.... (மணிக்கணக்கா சாவடிச்சிருக்கேன்ல.....)

பொறுமை காத்து ஒரு வழியாக என்னை முதல் பதிவு எழுத வைத்த அனைவருக்கும் நன்றிகள் மீண்டும்...

விரைவில் பதிவுகளுடன் சந்திப்போம்.......

ஹாவ் ஃபன்...


அன்புடன்:
தாமரைக்குட்டி.

64 comments:

 1. வண்கம் டாம்ரே, இன்ய சண்டே வால்த்துக்ள்! ரூ பட்சிட்டு வர்ரென்!

  ReplyDelete
 2. வாழ்த்துகள் தம்பி

  உருப்படியா பதிவு போடு

  அப்பதான் வருவேன்

  ஆல் தி பெஸ்ட்

  ReplyDelete
  Replies
  1. அக்கா... மறக்காம வந்துட்டிங்களே..... கண்டிப்பா உருப்பட்டியான பதிவுகள் நாளை முதல்..... வருகைக்கு நன்றி......

   Delete
 3. மஹா ஜனங்களே..... கும்புடுறேணுங்கோவ்வ்....////

  தனியே மஹா ஜனங்களேனு சொன்னா நா ஒத்துக்க மாட்டேன்! கோபி ஜனங்களே, மலர் ஜனங்களே அதெல்லாம் சொல்லோணும்!

  ReplyDelete
  Replies
  1. யோவ்வ்வ்... இது அந்த மஹா இல்லலே..... இந்த நாதஸ்வரத்த விடவே மாட்டியா.....

   Delete
 4. தாங்ஸ் மணி அண்ணே.......://///

  என்னது அண்ணனா? ங்கொய்யாலே.... மணின்னு மட்டும் கூப்புடு!

  ReplyDelete
  Replies
  1. ஒரு மருவாதிக்கோசம் கூப்புட்டேன்லே.... வாணாமா.......

   Delete
 5. இவனும் எப்பவாச்சும் பதிவு போடுவான்..... நாமளும் படிக்கலாம்ணு மூணு மாசமா நம்பி காத்திருந்த உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.../////

  யோ, அப்டியெல்லாம் நாம சொல்லவே இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. அட... ஒரு பில்டப்புக்காக சொன்னதுயா..... அசிங்கப்படுத்தாத....

   Delete
 6. என்னங்க பண்ணுறது எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன.....??? /////

  எதுக்கு?

  ReplyDelete
 7. ஒரு மருவாதிக்கோசம் கூப்புட்டேன்லே.... வாணாமா......./////

  என்னது மருவாதிக்காக கோஷம் போட்டியா? அரசியல் வாதிக்காக கோஷம் போடுறது தெரியும்! அது யாருலே மருவாதி ?

  ReplyDelete
  Replies
  1. கருமாதியோட அண்ணன்.... அவ்வ்வ்வ்வ்.....

   Delete
 8. அண்ணே தாமரைக்குட்டி நலமா?

  //நானும் பதிவுலகத்துல புகுந்துட்டேன்... உங்களோட வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் இன்ன பிற உதவிகள் அனைத்தும் தேவை...///

  Wel come பிளஸ் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நலம் ஹைதர் அண்ணே.... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....

   Delete
 9. ”என்ன பதிவு போடலாம்”னு ஒரு மாசமா யோசிச்சிக்கிட்டிருந்தேன்....../////

  யோ, நான்லாம் என்ன பதிவு போடக் கூடாதுன்னு ஒண்ணரை மாசமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!

  ReplyDelete
  Replies
  1. நீ யாரு.. புறாவுக்கே ஃபெல் அடிச்சவனாச்சே....

   Delete
 10. ஙே...ஙே...வாங்கோ வாங்கோ தாமரைக்குட்டி.வணக்கம் வந்தனம் வணக்கமுங்கோ.வாழ்த்துக்களோடு வரவேத்துக்கொள்றம்.
  கலக்குங்க....வலைகள் கிழியாமல் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹேமா அக்கா.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

   Delete
 11. வணக்கம் குட்டி. எப்படியோ பதிவுலகத்திற்கும் என்ட்ரீயாயிட்டிங்க. வாழ்த்துக்கள். நல்லா சூப்பரா பதிவு போடுவன்னு நம்பி ஃபாலோ பண்றேன். கலக்குங்க ...

  ReplyDelete
 12. கவலையே படாதீங்க... கண்டிப்பா நல்ல பதிவுகள் மட்டுமே எழுதுவேன்.....

  ReplyDelete
 13. ”அட இப்பிடி யோசிச்சே ரெண்டு மாசத்த ஓட்டிட்டமே”ண்ணு ஒரு மாசம் உக்காந்து ஃபீல் பண்ணிட்டிருந்தேன்.....//////

  மொத்தத்துல வெட்டியா இருந்ததுக்கு இவ்வளவு பில்டப்பா?

  ReplyDelete
 14. திரும்பி பாத்தா... அடி ஆத்தா....////

  ஆமா, ஆத்தா யாரை திரும்பிப் பார்த்தா?

  ReplyDelete
 15. தாமரைக்குட்டிணு எதுக்கு பேரு வச்சேனுணு கேக்காத ஆள் இல்ல....//////

  யோ, இது ரீலு தானே? நா கேட்டனா?

  ReplyDelete
 16. நாமளும் லாஜிக்கே இல்லாம பீட்டர் உடுறதும் பதிவுக்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைக்கிறதும்... எங்கங்க இருக்கு லாஜிக்? ////

  என்னது பீட்டரை உட்டுட்டியா? ஏன் அவரை அரெஸ்ட் பண்ணி வைச்சிருந்தியா?

  ReplyDelete
 17. நானும் பதிவுலகத்துல புகுந்துட்டேன்... உங்களோட வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் இன்ன பிற உதவிகள் அனைத்தும் தேவை.../////

  யூ மீன் ஓட்டு போடணும்! ஃபேஸ்புக் குரூப்ஸ்ல சேர் பண்ணணும்! இதுதானே.... ஓகே ஆல்ரெடி இதைத்தான் பண்ணிட்டு இருக்கோம்! இனியும் பண்ணிடுவோம்!

  ReplyDelete
 18. என்னுடைய ப்ளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டிகள் இணைப்பதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளேன்... ஏன்ணா எவனும் ஓட்டு போட மாட்டான்... ஹிஹிஹிஹி....

  ஃபக்டு ஃபக்டு

  ReplyDelete
 19. என்னை முதன் முதலில் முக நூலின் நாற்று குழுமத்தில் சேர்த்து நட்பின் வட்டம் பெருக வைத்த ஐடியா மணி க்கு நன்றி.../////

  என்ன நிரூபன் மாதிரி, திடீருன்னு புரியாத தமிழில் பேசுறே? எனி கன்ஃபியூஷன் ஆஃப் த கன்ஸ்டிடியூஷன் ஆஃப் த கல்டிவேஷன் ஆஃப் த சிட்டிவேஷன் ஆஃப் த வாஷ் பேசின்????

  ReplyDelete
 20. விரைவில் பதிவுகளுடன் சந்திப்போம்.......

  ஹாவ் ஃபன்...////

  ஓகே ஓகே சூப்பர்! நல்லா வருவடா!!

  ReplyDelete
 21. வணக்கம் தாமர

  ஒருவழியா பதிவு போட்டாச்சா... வாழ்த்துக்கள்
  கலக்குங்க பாஸ் கலக்குங்க

  ReplyDelete
 22. என்னுடைய ப்ளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டிகள் இணைப்பதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளேன்.///

  வைதிஸ் கொலை வெறி.... ஓட்டு பட்டை இணைக்கல்லைன்னாலும் திரட்டிகள்ள இணையுங்கோ

  ReplyDelete
 23. ஹாவ் ஃபன்...//

  பண்ணு மட்டும்தானா... டீயெல்லாம் கிடையாதா

  ReplyDelete
  Replies
  1. ஙே....??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

   Delete
 24. Hi Lotous, congrats. Good starting dear. Keep it up you'r great job.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் தாமர.... உங்கள் அறிமுக பதிவை பார்க்கும் போதே..... நல்ல நகைசுவை விருந்தை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கலாம் பல இருக்கே :)))

  முன்பு நம்ம ஓட்டவடை அண்ணன் நகைசுவையில் கொடிகட்டி பறந்தது போல் நீங்களும் பறக்க வாழ்த்துக்கள்... அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன் பாஸ் :)))))

  ReplyDelete
  Replies
  1. ஓ.வ.அண்ணன் மாதிரியெல்லாம் வரமுடியுமா துசி..... அவரு கில்லி.... எதோ நானும் என்னால் முடிஞ்சத...... அவ்வ்வ்வ்,........

   Delete
 26. தாமர வந்துட்டியா வாப்பா..........

  ReplyDelete
  Replies
  1. வந்தாசி வந்தாச்சி.... வாழ்த்துங்க.....

   Delete
 27. சும்மா சொல்லப்படாது பெஸ்ட் என்றியே...சும்மா தூக்குது....

  ReplyDelete
 28. நைட்டுக்கு பார்ட்டி வைச்சிருக்குறன் வந்து கோட்டிட்டு போயிடுப்பா......

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா வரேன்..... என்ன ஸ்பெஷல் குருவி....???

   Delete
 29. தனித்துவத்துடன் சிறப்புப் பெற என் இனிய வாழ்த்துக்கள்......

  மதுரன் கேட்ட மாதிரி
  ஹாவ் ஃபன்...//

  பண்ணு மட்டும்தானா... டீயெல்லாம் கிடையாதா

  நாங்க dinner எடுக்க வந்திருக்கம்... எங்க ஒன்றையும் காணேல்ல

  ReplyDelete
  Replies
  1. இப்ப தானே வந்திருக்கேன்... இனிமே தினமும் பார்ட்டி தான்.... நன்றி கலைவிழி

   Delete
 30. வணக்கம் தாமர..
  மக்கா நல்லா இருக்கியா?

  ஆரம்பமே அசத்தலா இருக்கு! பதிவுலகில் அடித்தாட வாழ்த்துக்கள்!
  விரிவாக கமெண்ட் போட டைம் கிடைக்கலை. கோவிச்சுக்காதே! சாரி குளிக்காம விட்டுடாதே!

  ReplyDelete
  Replies
  1. தாங்ஸ் நிரூ மாப்ள..... டைம் கிடைக்கிறப்ப மட்டும் வந்தாலே போதும் மக்கா...

   Delete
 31. வாங்கோ வேல்கோமே

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலை வருகைக்கும் வாழ்த்துக்கும்...

   Delete
 32. அன்பின் தாமரைக் குட்டி - முதல் பதிவா - கலக்கல் - தொடர்க - ய்ஹொடர்ந்து எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 33. வணக்கமுங்க!அரசால்,புரசலா பேசிக்கிட்டாங்க தான்!நான் தான் கண்டுக்கல.பதிவு ஆரம்ப அறிமுகமே களை கட்டியிருக்கு!பிச்சு எதறிடுங்க,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... வருகைக்கும்வ் வாழ்த்துக்கும் நன்றி.. பெரியவங்க ஆசீர்வாதம் எப்பவுமே எனக்க்கு தேவை....

   Delete
 34. வாழ்த்துக்கள் தாமரைகுட்டி.. வருக வருக

  ReplyDelete
  Replies
  1. அண்ணே... எப்பண்ணே வந்தீக..... நல்லா இருக்கீங்களா.... நன்றிண்ணே......

   Delete