Tuesday, 29 May 2012

சில்லரை......

வணக்கம் வாசர்களே.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி... (மகிழ்ச்சி எனக்குத்தான்... உங்களுக்கு நஹி...ஹிஹிஹி....)

இன்னைக்கு நீங்க ஒரு சவாலான கதையொன்று படிக்கப்போறிங்க..... அதாவது வெறுமனே கதாப்பாத்திரங்கள் பேசும் டயலாக் மட்டும் வைத்துக்கொண்டு நீங்களே கதைக்களத்தையும் சம்பவங்களையும் யூகித்துக்கொள்ளுங்கள்....

போலாமா......???

சில்லறை.....


”தம்பி... ஒரு பன்னு ஒண்ணு குடுப்பா...”

“இதோ இருக்கு.. நீயே எடுத்துக்க...”

”அப்பிடியே ஒரு டீ சொல்லு... ஸ்ராங்கா...”

“சிவப்பு டீ சர்ட்ட்டுக்கு ஸ்ராங்கா ஒரு டீ.......”

******

“இந்தாப்பா...”

“என்னையா.... எட்டு ரூவாக்கு 100 ரூவா எடுத்து நீட்டுற..? சில்லரையா குடு....”

“ச்சில்லரை இல்ல...”

“எங்கிட்டயும் இல்ல....”

“பக்கத்து கடையில போயி சில்லரை வாங்கியா...”

“ நானா.....???”

“ நீதான் வேற யாரு?”

******

“அண்ணாச்சி... பழம் எல்லாம் என்ன விலை?”

“எல்லா பழமுமா வேணும்......???”

“இது.............”

“பத்து பழம் இருவதுரூவா...”

“ரெண்டு பழம் குடுங்க....”

“அஞ்சு ரூவா குடு...”

“இந்தாங்க....”

“யோ... காலங்காத்தால வந்து நின்னு நூறு ரூவா நீட்டறே? சில்றயா குடு...”

“எடுத்து வைங்க அண்ணாசி.... பக்கத்து கடைல வாங்கியாறேன்...”

“ம்ம்......”

******


”ஸார்... தினத்தந்தி ஒண்ணு குடுங்க.....”

“இந்தா, சில்லறையா மூணு ரூவா குடு....”

“ நூறு ரூவா தான் இருக்கு....”

“அந்த பேப்பர இப்பிடி குடு...”

“விகடன் ஒண்ணும் சேத்து குடுங்க.....”

“எடுத்துக்க...... காச கொடு இப்படி.....”

“இந்தாங்க...”

”இந்தா... பாலன்ஸ் என்பது ரூவா.... சரி பாத்துக்க....”

******

“எ,...எ....என்ன சார்.... அரக்கபரக்க ஓடியாறிங்க....”

“இங்க ஒருத்தன் வந்தானே.... செகப்பு கலர் டீ சர்ட் போட்டுக்கிட்டு... உங்க கடைல கூட டீ சாப்பிட்டானே....???”

“ஆ...மா.....???”

”எங்க அவன்???”

“ஏ..ஏன்... என்னாச்சி.....???”

“அவன் குட்டுத்த நூறு ரூவா செல்லாத நோட்டு....”


(முடிந்தது.)
*****


என்ன... நண்பர்களே.... கதை பிடிச்சிருக்கா?
இந்த கதையை எழுதியது நானே.... ஸோ பாராட்டினாலும் எனக்கே.... காறிதுப்பினாலும் எனக்கே... ஹிஹிஹிஹி....

அன்புடன் தாமரைக்குட்டி.
 நன்றி!


20 comments:

 1. வணக்கம் வாசர்களே.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி...///

  வணக்கம் தாமர குட்டி........... சவுக்கியம் தானா??

  இன்டைக்கு தான் நான் ஒரு பெரிய சாதனை செய்து இருக்கன்.... முதன் முதலா ஒரு பதிவுக்கு கொமன்ட் போட்டிருக்கன்... ஹி...ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... வாங்க கலை.... நான் பதிவு போட்ட மேட்டர் எனக்கே இப்பதான் தெரியும்... அதுக்குள்ள நீங்க தீயா வந்து படிச்சுட்டிங்களே....???

   Delete
 2. நி செய்த சம்பவத்தை இப்படி பப்ளிக்கா சொல்ல ரொம்ப தைரியம் வேணும்..... ம்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பறவால்ல... தொடைச்சி போட்டு போய்கிட்ட்டே இருப்போம்ல.... (ஹிஹிஹி... தாங்ஸ் கலை....)

   Delete
 3. வணக்கம் வாசர்களே.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி...:////////

  யாருக்கு??

  (மகிழ்ச்சி எனக்குத்தான்... உங்களுக்கு நஹி...ஹிஹிஹி....) /////

  ஆ.... நல்ல வேளை சொல்லிட்டே! இல்லைன்னா........... இல்லைனா மட்டும் என்ன....? ஒண்ணுமே இல்லை!

  யோ, அதான் ஒண்ணுமே இல்லைங்கறேன்! அப்புறம் என்ன????

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணியண்ணே...... கதை நல்லாயிருக்கா.... நானும் தேறுவேனா? ஒண்ணுமே சொல்லலியே?

   Delete
 4. இன்னைக்கு நீங்க ஒரு சவாலான கதையொன்று படிக்கப்போறிங்க..... ////////////

  யாருக்கு சவாலான???????

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி... உங்க மிகப்பெரிய பல்ப்க்கு ரொம்ப நன்றி....

   Delete
 5. சில்லறைக்கு தட்டுப்பாடுடெண்டு நகைச்சுவையோட நாசூக்காக இதைவிட எப்பிடிச் சொல்ல முடியும்.அதுக்குள்ள கள்ளநோட்டுக் கள்ளரும்...எனக்கெண்டா நல்லாப் பிடிச்சிருக்கு.எனக்கு இப்பிடியெல்லாம் எழுத வரமாட்டுதாமெல்லோ.வாழ்த்துகள் தாமரைக்குட்டி !

  மணியத்தாரைப் பற்றி ஒரு பதிவு போடவேணும்.உங்கட ஆலோசனைக்காக பாத்துக்கொண்டிருந்தன்.வாறன் நேரமிருக்கேக்க வதனப்புத்தகத்துக்கு.நல்ல வடிவான ஒரு படமும் இருக்கு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க அன்பு அக்கா..... என்னோட கதை பிடிச்சிருக்கா? நெசமாவா? ரொம்ப பெரிய நன்றி அக்கா.... (மணியண்ணிக்கு ஆப்பு வைக்கிறதுண்ணா சொல்லுங்க நானும் வரேன்... என்னோட கதை நல்லா இல்லண்ணுட்டார்...ஹிஹிஹி....)

   Delete
 6. எலே தாமர ரொம்ப நாளைக்கப்புறம்...?

  அட சில்லரை இல்லென்னா ஏதாவது கோயிலுக்கு போக வேண்டியது தானே..ஏய்யா இங்க வாற...:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க குருவி சார்..... ஹிஹிஹ்ஹிஹ்ஹி.... கதை பிடிச்சிருக்கா?

   Delete
 7. இது உண்மையிலே உனக்கு நடந்த மேட்டர் தானே..?ஒத்துக்கய்யா..

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி.... அதெல்லாம் பேசப்படாது..... பப்ளிக்யா.....

   Delete
 8. யோ, சில பல சமூதாய சிக்கல்களினால என்னால நேத்திக்கு சரியா கமெண்டு போட முடியல! அதுனால இப்போது சொல்றேன்யா! - கதை சும்மா மணியம் கஃபே மட்டன் கொத்து போல சூப்பரா இருக்குய்யா!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி... தேங்ஸ் மணியண்ணே...

   Delete
 9. ////இந்த கதையை எழுதியது நானே.... ஸோ பாராட்டினாலும் எனக்கே.... காறிதுப்பினாலும் எனக்கே... ஹிஹிஹிஹி....///

  எவ்ளோ அழகாக நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீங்க உங்களைப் பாராட்டாமல் போகலாமோ?..

  பாராட்டுக்கள் தாமரையின் குட்டி.. ஒரு தரம்!!!!
  பாராட்டுக்கள் தாமரையின் குட்டி.. 2 தரம்!!!!
  பாராட்டுக்கள் தாமரையின் குட்டி.. 3 தரம்!!!!
  டிங்..டிங்..டிங்... மணி அடிச்சாச்சு:)))

  ReplyDelete
 10. அருமையான நகைச்சுவை கதை! பாராட்டுக்கள் தாமரைக்குட்டி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.. வருகைக்கு......

   Delete
 11. ம்ம்.. எதிர்பாராத திருப்பத்தோடு கதையை முடிச்சிருக்கிறீங்க.. கதை சூப்பர்...!!!

  ReplyDelete