Tuesday 29 May 2012

சில்லரை......

வணக்கம் வாசர்களே.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி... (மகிழ்ச்சி எனக்குத்தான்... உங்களுக்கு நஹி...ஹிஹிஹி....)

இன்னைக்கு நீங்க ஒரு சவாலான கதையொன்று படிக்கப்போறிங்க..... அதாவது வெறுமனே கதாப்பாத்திரங்கள் பேசும் டயலாக் மட்டும் வைத்துக்கொண்டு நீங்களே கதைக்களத்தையும் சம்பவங்களையும் யூகித்துக்கொள்ளுங்கள்....

போலாமா......???

சில்லறை.....


”தம்பி... ஒரு பன்னு ஒண்ணு குடுப்பா...”

“இதோ இருக்கு.. நீயே எடுத்துக்க...”

”அப்பிடியே ஒரு டீ சொல்லு... ஸ்ராங்கா...”

“சிவப்பு டீ சர்ட்ட்டுக்கு ஸ்ராங்கா ஒரு டீ.......”

******

“இந்தாப்பா...”

“என்னையா.... எட்டு ரூவாக்கு 100 ரூவா எடுத்து நீட்டுற..? சில்லரையா குடு....”

“ச்சில்லரை இல்ல...”

“எங்கிட்டயும் இல்ல....”

“பக்கத்து கடையில போயி சில்லரை வாங்கியா...”

“ நானா.....???”

“ நீதான் வேற யாரு?”

******

“அண்ணாச்சி... பழம் எல்லாம் என்ன விலை?”

“எல்லா பழமுமா வேணும்......???”

“இது.............”

“பத்து பழம் இருவதுரூவா...”

“ரெண்டு பழம் குடுங்க....”

“அஞ்சு ரூவா குடு...”

“இந்தாங்க....”

“யோ... காலங்காத்தால வந்து நின்னு நூறு ரூவா நீட்டறே? சில்றயா குடு...”

“எடுத்து வைங்க அண்ணாசி.... பக்கத்து கடைல வாங்கியாறேன்...”

“ம்ம்......”

******


”ஸார்... தினத்தந்தி ஒண்ணு குடுங்க.....”

“இந்தா, சில்லறையா மூணு ரூவா குடு....”

“ நூறு ரூவா தான் இருக்கு....”

“அந்த பேப்பர இப்பிடி குடு...”

“விகடன் ஒண்ணும் சேத்து குடுங்க.....”

“எடுத்துக்க...... காச கொடு இப்படி.....”

“இந்தாங்க...”

”இந்தா... பாலன்ஸ் என்பது ரூவா.... சரி பாத்துக்க....”

******

“எ,...எ....என்ன சார்.... அரக்கபரக்க ஓடியாறிங்க....”

“இங்க ஒருத்தன் வந்தானே.... செகப்பு கலர் டீ சர்ட் போட்டுக்கிட்டு... உங்க கடைல கூட டீ சாப்பிட்டானே....???”

“ஆ...மா.....???”

”எங்க அவன்???”

“ஏ..ஏன்... என்னாச்சி.....???”

“அவன் குட்டுத்த நூறு ரூவா செல்லாத நோட்டு....”


(முடிந்தது.)
*****


என்ன... நண்பர்களே.... கதை பிடிச்சிருக்கா?




இந்த கதையை எழுதியது நானே.... ஸோ பாராட்டினாலும் எனக்கே.... காறிதுப்பினாலும் எனக்கே... ஹிஹிஹிஹி....

அன்புடன் தாமரைக்குட்டி.
 நன்றி!














Saturday 5 May 2012

”கோட்டரு தாண்டா கோவாலு மேட்டரு....”


இன்று காலை மாத்தியோசி மணியிடம் இருந்து அழைப்பு வந்ததாக சொன்னேன் இல்லையா..... இதோ அந்த கலாட்டா காமெடி...

.

“ஹலோ...”- இது தாமரை.

“ஹலோ தாமர...”

“யாரு பேசறது...”

“ நான் தான் பேசறேன்...”

“ நீ என்ன பெரிய வெண்ணையா... பேரச் சொல்லுலே வெங்க....”

“டேய் தாமர.. நான் தாண்டா மணி பேசுறேன்..”

“ஙே...??? சொல்லுங்க மணியண்ணே... என்ன திடீர்னு...”

(அப்புறம் தான் கவனித்தேன்.. மணியின் குரல் கலங்கிப்போயிருந்தது.. என்னமோ பிராப்பிளம்..)

“என்னாச்சு மணியண்ணே.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு...”

(திடீர்னு மணி ஓஓஓன்னு ஒப்பாரி வைக்க ஆரம்ப்[பிசுட்டாரு... )

”அட மணியண்ண ஏன் அழுவுறிங்க..? என்னாச்சு...”

”தா..ம..ர... நா எம்புட்டு நல்ல்...ல..வன்...” (எப்போ போயி காமெடி பண்ணுறார் பாருங்க...)

“அட அழுதுகிட்டே பேசாதயா.... விஷயத்த சொல்லு...”

” நான் என்னிக்காச்சும் கோவமா பேசி பாத்திருக்கியா...”

“இல்ல...”

“ நான் என்னிக்காச்சும் திட்டி பாத்திருக்கியா......”

“இல்ல...”

“ நான் எம்ம்புட்டு நல்லவன்????”

“ஹும் மேல...”

“எனக்கு போயி இப்பிடி நடந்துடிச்சே...??

“எப்பிடி?”

“ நான் ஒரு குடிகாரன் ஆகிட்ட்டேன் தா...ம...ர...ஓஓ....ஓ....ஓ....ஓஓ.....”

“யோவ்... அழறத மொதல்ல நிறுத்து.... நீ குடிச்சியா.....?? நீ குடிச்சியா.....??? நம்புற மாதிரி இல்லையே....”

“பாரு உன்னாலயே நம்ப முடியல இல்ல.... ஆனாலும் நான் குடிச்சிட்டேன்... ஓஓ...ஓஓஓ...ஓஓ.... நான் குடிச்சிட்டேன்....ஓஓ...ஓஓ...”

“எதுக்குயா குடிச்சே..... லவ் பெயிலியரா....”

“இல்லலல... ஓஓ..ஓ....” (அதானே பார்த்தேன்... யாருகிட்ட்ட போயி லவ் பெயிலியரான்னு கேட்டேன் பாருங்க..)


”ஓடிப்போன பொண்டாட்டி திரும்பி வந்துடிச்சா....??

“இல்லலலல......”

“வேலய விட்டு தூக்கிடானுவளா...”

“இல்லலலலல......”

“ஒடம்பு கெடம்பு சரியில்லயா.....???”

“இல்லலல...........”

“அப்புறம் என்ன மானாட மயிலாடக்கு குடிச்சே....”

“கெளரவத்தை காப்பாத்த குடிச்சேன்....”

“என்னாதூஊஊ...??????”

“ஆமா தாமர... என்னோட சுய கெளரவத்தை காப்பாத்த நான் குடிச்ச்சிட்டேன்...”
(அதெல்லாம் உங்கிட்ட ஏதுயா?)

"என்ன மணி சொல்லுற.... ஒன்னும் புரியலியே...”

“ஒரு பொண்ணு சரக்கு ஊத்தி குடுத்து சியர்ஸ்ஸ்ஸ்னு சொல்லிச்சுபா....”

“சரி.....அதுக்கு....???”

“ஒரு பொண்ணு சரக்கு அடிக்குது... நமக்கு அடிக்கத்தெரியலைண்ணா கெளரவ பிரச்சனை இல்லயா... அதான் வாங்கி குடிச்சிட்டேன்.... நான் குடிகாரன் ஆயிட்டேன்.. ஓஓஓஓஒ......ஓஓஓஓ...ஓஓஓஓ....”
(அட நாதாரி....)


“சரி விடு மணி.... தெரியாம குடிச்சிட்டேனு நெனச்சி மறந்துடு.....”

“ஓஓஓ....ஓஓஓ..... இல்ல தாமர ... நான் லைஃப்ல குடிக்கவே கூடாதுன்னு ஒரு
வைராக்கியத்தோடு இருந்தேன் பா.....”


“ஹும்ம்.... சரிபா.... அத ஏன் நெனச்சிக்கிட்டே இருக்க மறந்துடு....”

“இல்ல தாமர.. நான் ஒரு குடிகாரன்னு ஊர் ஒலகத்துல தப்பா பேசுவாங்கல்ல....... நீயே என்னைய பத்தி என்ன நெனைப்பே...??”
(இல்லண்ணா மட்டும் உன்னைய பத்தி ....?)


”யாரும் உன்னைய பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்க... இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணம்....”

“இல்ல தாமர.... (அடிங்.....) நான் நல்ல குடும்பத்துல பொறந்தவன்யா.... (அப்போ நாங்க எல்லாம் நாற குடும்பத்துல பொறந்தவைங்களா....???)

”சரி விடுயா மணி ....காலங்காத்தால அவனவனுக்கு ஆயிரம் வேலை கெடக்கு...”

”இல்ல தாமர.......”

“யோவ்வ்வ்... நிறுத்துயா..... என்னையா பெரிய குடிகாரன் நீ.... என்னத்த குடிச்சு தொலைச்சுட்டேன்னு இப்போ பொலம்பி தள்ளிக்கிட்டிருக்க....???
அவனவன் குடிச்சுட்டு தெருவுல விழுந்து கெடக்கான்... ஒரு கோட்டரு அடிச்சிட்டு ஏன்யா அழுவுற....??

“இல்ல தாமர.. நான் குவாட்டர் அடிக்கல...”

“ஆஃப் ஆ??””

“இல்ல....”

“ஙே...?? ஃபுல்லா அடிச்சே... நம்ப முடியலியே....??”

“ஐயோ ஃபுல்லும் இல்ல....”

“அப்புறம் என்ன எழுவுதான்யா குடிச்சே.....”

”அது....வந்து......”

“ஹும் சொல்லுயா...”

”ஒரே ஒரு கப்..........”

“அட பாவி மணி... ஒரே ஒரு கப் அடிச்சிட்டா பொலம்பிக்கிட்டிருக்கிற.... காட்டான் அண்ணர் சரக்கு அடிச்சி பாத்திருக்கியா? ஒரு ஃபுல்லயே ராவா சாத்துவாரு... சரி விடுயா... ஒரு கப் சரக்கு அடிச்சா அது சரக்கு லிஸ்ட்லயே வராது... ஃப்ரீயா விடு......”


“அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் குடிச்சிட்ட்டேன்.... எனக்கு வாமிட் எல்லாம் வந்திச்சு.....”

“அடங்... அப்பிடி என்னத்ததான்யா குடிச்சி தொலைச்சே வாந்தி வர்ரதுக்கு....??”

“ஒயின்.........”

“என்.......னா................து.......???????????????????????????????????????????????????????????”

(அத கேட்டு நான் டென்ஷன் ஆகி.. மணிய கண்ணாபிண்ணான்னு திட்டி.... கழுவி கழுவி ஊத்தி....
 ஒரு வழியா அழறத நிறுத்த வச்சிட்டேன்... ஆனாலும் மனுஷன் கடைசில ஒண்ணு சொல்லிச்சு பாருங்க.....)

“ஒயின் குடிச்சாலும், ஹாட் டிரிங்ஸ் குடிச்சாலும் உலகம் குடிகாரன்னு தான் சொல்லும்.... ஓஓஓஓ.......”” (மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டாரு....)

மோரல்: இன்று முதல் ஒயின் குடித்தால் அது “குடி” லிஸ்டில் சேராது என்பதை மிகவும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்......

ஒரு கப் ஒயின் சாப்பிட தெரியல.... அதையும் வாமிட் பண்ணி வெச்சிருக்கு பயபுள்ள...... இந்தாளெல்லாம் என்னாத்துக்கு உசிரோட இருந்துகிட்டு....

ஹிஹிஹிஹிஹிஹி.......







வணக்கம்.
மீண்டும் புதிய பதிவில் சந்திப்போம்.... ஹாவ் ஃபன்.......



























.

Wednesday 2 May 2012

தாமரைக்குட்டன்......

மஹா ஜனங்களுக்கு மெஹா வணக்கம்.....

என்னோட பேரை தாமரைக்குட்டன்ன்னு மாத்திடலாம்னு இருக்கேன்....

ஏன்டா தாமர உனக்கு இந்த திடீர் கொலைவெறி ???

காரணம் இல்லாமயா.......

ஃபேஸ்புக்குல ஒருத்தன் என்னோட ’தாமரைக்குட்டி’ எங்கிற பேரை படிச்சிட்டு நான் என்னமோ செமையான ஒரு மலையாள குட்டிண்ணு நெனச்சி  தப்புத்தப்பான தமிழ்ல லவ் லெட்டர் ஒண்ணு மெயில் பண்ணியிருக்கான்....

அட... அவன் எனக்கு லெட்டர் குடுத்ததுக்கு கூட நான் அசிங்கப்படல... ஆனா அதுல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருங்க.... படிச்சதுல இருந்தே செம
மூடு அவுட்...


 “அன்புள்ள தாமாரைக்கி... (கடவுளே....)

நீ நள்ளாக்கீரியா.... (சத்தியமா இல்லடா....)
நானும் நள்ளாக்கீரன்... (ஏன் இருக்க மாட்டே....???)
உன்னாண்ட ஒண்ணு சொல்லனும்... (பெரிய வாரணம் ஆயிரம் சூர்யா....)
உன்ன இதுக்கு முன்னாடியும் இப்பவும் பாத்ததில்ல.... (ஆவ்வ்வ்....)
ஆனா அது ஏன்னமோ தரியல்ல உன்னோட பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (ஙே...???)



உன்னிய பாக்கணும் போலியே கெடக்கு... (ஏன்டா அப்பிடி...???)

ராவா கோட்டரு அடிச்ச கணக்கா நெஞ்சு குலி பெறாண்டுது.... (என்னாது குலியா.....????)

எனக்கி தெரியும் நீ தாமர குட்டி கணக்கா ச்சும்மா கும்ணு இருப்பேண்ணு... அதுனால் தான் நீ தாமார இன்னு பேரு வெச்சிருக்கே.... (அடங்....)

நா உன்னிய லவ்வு உடுரேன்...
நீயும் என்னிய லவ்வு உடு...

அப்பிடி என்னிய நீ லவ்வு உட்டீண்ணா நாமோ மவாலிபுரோம் போலாம்... (டேய்.. எதுக்கு பலி குடுக்கவா?)

தேட்டருக்கு போலாம்.. பீச்சுக்கு போலாம்...
பார்க்கு போலாம்... ஒரே ஜாலியா ஊர் சுத்லாம்....( நீயும் நானுமாடா... வாணாம்டா ஊரு தப்பா பேசும்...)

என்னோட லெட்டர படிச்ச பின்னாடி கண்டிப்பா உனிக்கும் எம்மேல லவ்வு வெரும்... ( நல்லா வந்திச்சுடா லவ்வு)

அப்பிடியே லவ்வு வந்திச்சுண்ணா எனக்கி மெயிலு அணுப்பு...

லவ்வுடன் **********.”””



ஹும்ம்... பாத்தீங்கல்ல.... ச்சேய்.. படிச்சீங்கல்ல.... இந்த மாதிரி ஒரு லெட்டர படிச்ச பின்னாடி நாலு நாள் எனக்கு தூக்கமே வரல..
எல்லாத்துக்கும் காரணம் தாமரைக்குட்டி எங்கிற என்னோட பேரு....


என்னைய போயி ஒரு கேரள குட்டிண்ணு நெனச்சிட்டியேடா பாவி....


டிஸ்கி: மெய்யாலுமே இது போல ஒரு லெட்டர் வந்திச்சு....



டிஸ்கி: பில்லா 2 பாடல்கள் கேட்டுக்கிட்டிருக்கேன்... விமர்சனப்பதிவு  நாளை......