Wednesday 2 May 2012

தாமரைக்குட்டன்......

மஹா ஜனங்களுக்கு மெஹா வணக்கம்.....

என்னோட பேரை தாமரைக்குட்டன்ன்னு மாத்திடலாம்னு இருக்கேன்....

ஏன்டா தாமர உனக்கு இந்த திடீர் கொலைவெறி ???

காரணம் இல்லாமயா.......

ஃபேஸ்புக்குல ஒருத்தன் என்னோட ’தாமரைக்குட்டி’ எங்கிற பேரை படிச்சிட்டு நான் என்னமோ செமையான ஒரு மலையாள குட்டிண்ணு நெனச்சி  தப்புத்தப்பான தமிழ்ல லவ் லெட்டர் ஒண்ணு மெயில் பண்ணியிருக்கான்....

அட... அவன் எனக்கு லெட்டர் குடுத்ததுக்கு கூட நான் அசிங்கப்படல... ஆனா அதுல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருங்க.... படிச்சதுல இருந்தே செம
மூடு அவுட்...


 “அன்புள்ள தாமாரைக்கி... (கடவுளே....)

நீ நள்ளாக்கீரியா.... (சத்தியமா இல்லடா....)
நானும் நள்ளாக்கீரன்... (ஏன் இருக்க மாட்டே....???)
உன்னாண்ட ஒண்ணு சொல்லனும்... (பெரிய வாரணம் ஆயிரம் சூர்யா....)
உன்ன இதுக்கு முன்னாடியும் இப்பவும் பாத்ததில்ல.... (ஆவ்வ்வ்....)
ஆனா அது ஏன்னமோ தரியல்ல உன்னோட பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (ஙே...???)



உன்னிய பாக்கணும் போலியே கெடக்கு... (ஏன்டா அப்பிடி...???)

ராவா கோட்டரு அடிச்ச கணக்கா நெஞ்சு குலி பெறாண்டுது.... (என்னாது குலியா.....????)

எனக்கி தெரியும் நீ தாமர குட்டி கணக்கா ச்சும்மா கும்ணு இருப்பேண்ணு... அதுனால் தான் நீ தாமார இன்னு பேரு வெச்சிருக்கே.... (அடங்....)

நா உன்னிய லவ்வு உடுரேன்...
நீயும் என்னிய லவ்வு உடு...

அப்பிடி என்னிய நீ லவ்வு உட்டீண்ணா நாமோ மவாலிபுரோம் போலாம்... (டேய்.. எதுக்கு பலி குடுக்கவா?)

தேட்டருக்கு போலாம்.. பீச்சுக்கு போலாம்...
பார்க்கு போலாம்... ஒரே ஜாலியா ஊர் சுத்லாம்....( நீயும் நானுமாடா... வாணாம்டா ஊரு தப்பா பேசும்...)

என்னோட லெட்டர படிச்ச பின்னாடி கண்டிப்பா உனிக்கும் எம்மேல லவ்வு வெரும்... ( நல்லா வந்திச்சுடா லவ்வு)

அப்பிடியே லவ்வு வந்திச்சுண்ணா எனக்கி மெயிலு அணுப்பு...

லவ்வுடன் **********.”””



ஹும்ம்... பாத்தீங்கல்ல.... ச்சேய்.. படிச்சீங்கல்ல.... இந்த மாதிரி ஒரு லெட்டர படிச்ச பின்னாடி நாலு நாள் எனக்கு தூக்கமே வரல..
எல்லாத்துக்கும் காரணம் தாமரைக்குட்டி எங்கிற என்னோட பேரு....


என்னைய போயி ஒரு கேரள குட்டிண்ணு நெனச்சிட்டியேடா பாவி....


டிஸ்கி: மெய்யாலுமே இது போல ஒரு லெட்டர் வந்திச்சு....



டிஸ்கி: பில்லா 2 பாடல்கள் கேட்டுக்கிட்டிருக்கேன்... விமர்சனப்பதிவு  நாளை......







7 comments:

  1. யோவ் தாமர பேர மாத்தீராதய்யா... இந்த பேர பாக்கும்போதுதான் ஒரு கிக்கா இருக்கு.. மாத்தினா அது போயிடும்

    ReplyDelete
  2. எனக்கி தெரியும் நீ தாமர குட்டி கணக்கா ச்சும்மா கும்ணு இருப்பேண்ணு//

    ஹா ஹா ஹா கும்முன்னா....

    ReplyDelete
  3. தேட்டருக்கு போலாம்.. பீச்சுக்கு போலாம்...
    பார்க்கு போலாம்... ஒரே ஜாலியா ஊர் சுத்லாம்//

    கடைசியா ஹாஸ்பிட்டலுக்கு போவலாம்...

    ReplyDelete
  4. இந்தப் பெயரும் உந்தத் தாமரைப்பூவும் வடிவில்ல.மாத்துங்கோ முந்திப்போலவே !

    ReplyDelete
  5. குட்டிங்கற பேர்ல தான்யா கிக்கே இருக்கு. இருக்கிறதே நல்லாயிருக்கு. இதையே மெயின்டெயின் பண்ணுங்கோ.

    ReplyDelete
  6. சிரிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு காலிப்பாஆஆஆஅ

    ReplyDelete