Saturday 5 May 2012

”கோட்டரு தாண்டா கோவாலு மேட்டரு....”


இன்று காலை மாத்தியோசி மணியிடம் இருந்து அழைப்பு வந்ததாக சொன்னேன் இல்லையா..... இதோ அந்த கலாட்டா காமெடி...

.

“ஹலோ...”- இது தாமரை.

“ஹலோ தாமர...”

“யாரு பேசறது...”

“ நான் தான் பேசறேன்...”

“ நீ என்ன பெரிய வெண்ணையா... பேரச் சொல்லுலே வெங்க....”

“டேய் தாமர.. நான் தாண்டா மணி பேசுறேன்..”

“ஙே...??? சொல்லுங்க மணியண்ணே... என்ன திடீர்னு...”

(அப்புறம் தான் கவனித்தேன்.. மணியின் குரல் கலங்கிப்போயிருந்தது.. என்னமோ பிராப்பிளம்..)

“என்னாச்சு மணியண்ணே.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு...”

(திடீர்னு மணி ஓஓஓன்னு ஒப்பாரி வைக்க ஆரம்ப்[பிசுட்டாரு... )

”அட மணியண்ண ஏன் அழுவுறிங்க..? என்னாச்சு...”

”தா..ம..ர... நா எம்புட்டு நல்ல்...ல..வன்...” (எப்போ போயி காமெடி பண்ணுறார் பாருங்க...)

“அட அழுதுகிட்டே பேசாதயா.... விஷயத்த சொல்லு...”

” நான் என்னிக்காச்சும் கோவமா பேசி பாத்திருக்கியா...”

“இல்ல...”

“ நான் என்னிக்காச்சும் திட்டி பாத்திருக்கியா......”

“இல்ல...”

“ நான் எம்ம்புட்டு நல்லவன்????”

“ஹும் மேல...”

“எனக்கு போயி இப்பிடி நடந்துடிச்சே...??

“எப்பிடி?”

“ நான் ஒரு குடிகாரன் ஆகிட்ட்டேன் தா...ம...ர...ஓஓ....ஓ....ஓ....ஓஓ.....”

“யோவ்... அழறத மொதல்ல நிறுத்து.... நீ குடிச்சியா.....?? நீ குடிச்சியா.....??? நம்புற மாதிரி இல்லையே....”

“பாரு உன்னாலயே நம்ப முடியல இல்ல.... ஆனாலும் நான் குடிச்சிட்டேன்... ஓஓ...ஓஓஓ...ஓஓ.... நான் குடிச்சிட்டேன்....ஓஓ...ஓஓ...”

“எதுக்குயா குடிச்சே..... லவ் பெயிலியரா....”

“இல்லலல... ஓஓ..ஓ....” (அதானே பார்த்தேன்... யாருகிட்ட்ட போயி லவ் பெயிலியரான்னு கேட்டேன் பாருங்க..)


”ஓடிப்போன பொண்டாட்டி திரும்பி வந்துடிச்சா....??

“இல்லலலல......”

“வேலய விட்டு தூக்கிடானுவளா...”

“இல்லலலலல......”

“ஒடம்பு கெடம்பு சரியில்லயா.....???”

“இல்லலல...........”

“அப்புறம் என்ன மானாட மயிலாடக்கு குடிச்சே....”

“கெளரவத்தை காப்பாத்த குடிச்சேன்....”

“என்னாதூஊஊ...??????”

“ஆமா தாமர... என்னோட சுய கெளரவத்தை காப்பாத்த நான் குடிச்ச்சிட்டேன்...”
(அதெல்லாம் உங்கிட்ட ஏதுயா?)

"என்ன மணி சொல்லுற.... ஒன்னும் புரியலியே...”

“ஒரு பொண்ணு சரக்கு ஊத்தி குடுத்து சியர்ஸ்ஸ்ஸ்னு சொல்லிச்சுபா....”

“சரி.....அதுக்கு....???”

“ஒரு பொண்ணு சரக்கு அடிக்குது... நமக்கு அடிக்கத்தெரியலைண்ணா கெளரவ பிரச்சனை இல்லயா... அதான் வாங்கி குடிச்சிட்டேன்.... நான் குடிகாரன் ஆயிட்டேன்.. ஓஓஓஓஒ......ஓஓஓஓ...ஓஓஓஓ....”
(அட நாதாரி....)


“சரி விடு மணி.... தெரியாம குடிச்சிட்டேனு நெனச்சி மறந்துடு.....”

“ஓஓஓ....ஓஓஓ..... இல்ல தாமர ... நான் லைஃப்ல குடிக்கவே கூடாதுன்னு ஒரு
வைராக்கியத்தோடு இருந்தேன் பா.....”


“ஹும்ம்.... சரிபா.... அத ஏன் நெனச்சிக்கிட்டே இருக்க மறந்துடு....”

“இல்ல தாமர.. நான் ஒரு குடிகாரன்னு ஊர் ஒலகத்துல தப்பா பேசுவாங்கல்ல....... நீயே என்னைய பத்தி என்ன நெனைப்பே...??”
(இல்லண்ணா மட்டும் உன்னைய பத்தி ....?)


”யாரும் உன்னைய பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்க... இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணம்....”

“இல்ல தாமர.... (அடிங்.....) நான் நல்ல குடும்பத்துல பொறந்தவன்யா.... (அப்போ நாங்க எல்லாம் நாற குடும்பத்துல பொறந்தவைங்களா....???)

”சரி விடுயா மணி ....காலங்காத்தால அவனவனுக்கு ஆயிரம் வேலை கெடக்கு...”

”இல்ல தாமர.......”

“யோவ்வ்வ்... நிறுத்துயா..... என்னையா பெரிய குடிகாரன் நீ.... என்னத்த குடிச்சு தொலைச்சுட்டேன்னு இப்போ பொலம்பி தள்ளிக்கிட்டிருக்க....???
அவனவன் குடிச்சுட்டு தெருவுல விழுந்து கெடக்கான்... ஒரு கோட்டரு அடிச்சிட்டு ஏன்யா அழுவுற....??

“இல்ல தாமர.. நான் குவாட்டர் அடிக்கல...”

“ஆஃப் ஆ??””

“இல்ல....”

“ஙே...?? ஃபுல்லா அடிச்சே... நம்ப முடியலியே....??”

“ஐயோ ஃபுல்லும் இல்ல....”

“அப்புறம் என்ன எழுவுதான்யா குடிச்சே.....”

”அது....வந்து......”

“ஹும் சொல்லுயா...”

”ஒரே ஒரு கப்..........”

“அட பாவி மணி... ஒரே ஒரு கப் அடிச்சிட்டா பொலம்பிக்கிட்டிருக்கிற.... காட்டான் அண்ணர் சரக்கு அடிச்சி பாத்திருக்கியா? ஒரு ஃபுல்லயே ராவா சாத்துவாரு... சரி விடுயா... ஒரு கப் சரக்கு அடிச்சா அது சரக்கு லிஸ்ட்லயே வராது... ஃப்ரீயா விடு......”


“அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் குடிச்சிட்ட்டேன்.... எனக்கு வாமிட் எல்லாம் வந்திச்சு.....”

“அடங்... அப்பிடி என்னத்ததான்யா குடிச்சி தொலைச்சே வாந்தி வர்ரதுக்கு....??”

“ஒயின்.........”

“என்.......னா................து.......???????????????????????????????????????????????????????????”

(அத கேட்டு நான் டென்ஷன் ஆகி.. மணிய கண்ணாபிண்ணான்னு திட்டி.... கழுவி கழுவி ஊத்தி....
 ஒரு வழியா அழறத நிறுத்த வச்சிட்டேன்... ஆனாலும் மனுஷன் கடைசில ஒண்ணு சொல்லிச்சு பாருங்க.....)

“ஒயின் குடிச்சாலும், ஹாட் டிரிங்ஸ் குடிச்சாலும் உலகம் குடிகாரன்னு தான் சொல்லும்.... ஓஓஓஓ.......”” (மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டாரு....)

மோரல்: இன்று முதல் ஒயின் குடித்தால் அது “குடி” லிஸ்டில் சேராது என்பதை மிகவும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்......

ஒரு கப் ஒயின் சாப்பிட தெரியல.... அதையும் வாமிட் பண்ணி வெச்சிருக்கு பயபுள்ள...... இந்தாளெல்லாம் என்னாத்துக்கு உசிரோட இருந்துகிட்டு....

ஹிஹிஹிஹிஹிஹி.......







வணக்கம்.
மீண்டும் புதிய பதிவில் சந்திப்போம்.... ஹாவ் ஃபன்.......



























.

13 comments:

  1. யோ, நேத்திக்கு இராத்தி வைன் குடிச்சத பப்ளிக் பண்ணிடியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
    Replies
    1. உனக்கு ஒயின் குடுத்த அந்த பொண்ண வலை போட்டு தேடிக்கிட்டிருக்கேன்.....

      Delete
    2. யோ, அவ வலைக்குள்ளையெல்லாம் அகப்பட மாட்டா!

      Delete
    3. மணி அண்ணா என்ன இது ,,,,

      Delete
    4. சத்தியமா என்ர அண்ணனுக்கு நான் உத்திக் கொடுக்கலை .....


      மப்புல உலரும் மாங்கா மண்டையா எண்டு என்றோ ஒரு நாள் ஏன் அண்ணா நாரை நான்பாசமா கொஞ்சியதர்க்கு இன்றைக்கு இம்புட்டு பெரிய பதிவா உருவாகி குடும்ப மருவாத போகுதேஏஏஏஏஏஏஏஏ ...

      Delete
  2. அப்போ சும்மா வாய் மட்டும்தானா.அதிரான்ர பூஸார் கூட வைன் குடிச்சிட்டு ஜம்மெண்டு எலும்பை கடிச்சுக்கொண்டு கள்ளனைப் பிடிச்சுக் குடுக்க ரெடியா இருக்கிறாராம்.ஒரு கிளாஸ் வைனுக்கே இந்தப் பாடோ.....மணி...சிரிக்க வைக்கிற ஆள்....சிரிப்பாயிருக்கு.உப்பிடிப் பார்த்தால் நாங்கள்லாம் ம்ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! என்னோட மானம் மருவாதி, கருமாதி எல்லாம் போய்ச்சே?

      Delete
    2. ச சா நம்ம குடும்ப மான மருவாதி எல்ல்லாம் இப்புடி சாந்தி சிரிக்க வைசிடீன்களே அண்ணா ஆஆஆஆஆஆஆஆஅ அனாஆஆஆஆஆ ....


      இனிமேல் ஆர் கிட்டப் போய் சொல்லுவேன் அண்ணாஆஅஆஆஆஆஅ

      Delete
  3. கெட்ட பழக்கம் முதலில் நண்பனைப் போல வரும்.பிறகு சொந்தக்காரரைப்போலத் தங்கிடும்.முதலில் பியர் பிறகு ஜின் பிறகு ரம் அதுக்குப்பிறகு ஸ்காட்ச்,விஸ்கி எண்டு தொடரும். குடி கெடுக்கும் குடி....கவனமப்பு மணி !

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இவ்ளோ ஐட்டம்ஸ் இருக்கா? சொல்லித்தந்ததுக்கு மிக்க நன்றி ஹேமா! அடுத்தவாட்டி ட்ரை பண்றேன்! - தாமர அதுக்கும் பதிவு போடுவியாலே?

      Delete
  4. நல்லா இருக்குங்க உங்கள் பதிவு

    ReplyDelete
  5. மணி அண்ணையின் துணியை உருவிப்புட்டாங்களே

    ReplyDelete
  6. ஹா...ஹா..ஹா... ஒரு கப் வைனுக்கே ஃப்ளட்டா???? அச்சோஓஓஒ..பாவம்..ஆனாலும் தாமரை... இப்புடி பப்ளிக் பண்ணியிருக்க வேணாம்... அந்தப் பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிருக்கும்??? :)

    ReplyDelete